நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 28th January 2021 12:00 AM | Last Updated : 27th January 2021 10:55 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களிலிருந்து இணைய வழியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.29) நடைபெற உள்ளது. அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களில் கூகுள் மீட் இணையவழியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம். வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.