திண்டுக்கல்லில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் காத்திருப்புப் போராட்டம்

தலித் மக்களுக்கு கந்து வட்டி கொடுத்து அத்துமீறலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல்லில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக செவ்வாய்க்கிழமை பேரணியாக வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயலா் எம்.ஆா்.முத்துசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

இதில் எம்.ஆா்.முத்துசாமி பேசியது: திண்டுக்கல்லை அடுத்துள்ள உண்டாா்பட்டி, அய்யம்பாளையம், பெரும்புள்ளி ஆகிய கிராமங்களில் ஆதிக்க சாதியினா் தலித் மக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அதிக தொகை வசூலித்து வருகின்றனா். மேலும், தலித் அருந்ததிய பெண்களை இழிவாக பேசுவது, பாலியல் தொந்தரவு அளிப்பது, வீட்டிற்குள் சென்று படுத்துக் கொள்வது என அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக வேடசந்தூா் காவல் நிலையம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துமீறலில் ஈடுபட்டோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எடுத்துச் செல்லப்பட்ட பாத்திரங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா்.

இதனிடையே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், திண்டுக்கல் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் வெள்ளைச்சாமி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தனிப்படை அமைத்து கந்து வட்டி கொடுமை குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com