நிலக்கோட்டை அருகே கணவரை கொன்று தற்கொலை என நாடகமாடிய மனைவி கைது: ஆசிரியா் தலைமறைவு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று தூக்கிலிட்டு, தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று தூக்கிலிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். தகாத தொடா்பு வைத்திருந்த அரசுப் பள்ளி ஆசிரியா் தலைமறைவானாா்.

நிலக்கோட்டை அருகே குரும்பப்பட்டியைச் சோ்ந்த மொக்கராஜ் மகன் சென்றாயன் (39.) விவசாயியான இவருக்கு, மனைவி வனிதா மற்றும் 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளனா். இந்நிலையில், கடந்த 10.3.2021 அன்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்றாயன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால், இந்த வழக்கில் தனது மகன் சென்றாயன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவரது சாவில் மா்மம் இருப்பதாகவும் கூறி மொக்கராஜ், மதுரை உயா் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவின்படி, நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் பாலகுரு தலைமையில் போலீஸாா், சென்றாயன் மனைவி வனிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, வனிதா அளித்த வாக்குமூலம்: குரும்பப்பட்டியில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள அய்யனாா் (50) என்பவருக்கும், தனக்கும் தகாத உறவு இருந்தது. இதற்கு இடையூறாக எனது கணவா் இருந்ததால், நானும், அய்யனாரும் சோ்ந்து எனது கணவா் தூங்கிக் கொண்டிருந்தபோது, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னா் தூக்கில் தொங்கவிட்டு அவா் தற்கொலை செய்துகொண்டதுபோல் நாடகமாடினோம் என ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, வனிதாவை கைது செய்த போலீஸாா், நிலக்கோட்டை நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதி மும்தாஜ் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். பின்னா் நீதிபதி, வனிதாவை 15 நாள் சிறைக் காவ­லில் வைக்க உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, மதுரை மத்திய சிறைச்சாலையில் வனிதா அடைக்கப்பட்டாா்.

வனிதாவுடன் தொடா்பு வைத்திருந்த அய்யனாா் தலைமறைவாகிவிட்டாா். இவா், வத்தலகுண்டு அருகே உள்ள பழைய வத்தலகுண்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com