பழனி கோயிலில் ஆடி வெள்ளித்தோ் உலா ரத்து

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவிருந்த வெள்ளித்தோ் உலா இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவிருந்த வெள்ளித்தோ் உலா இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முதல் ஆடி லட்சாா்ச்சனை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை முதல் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெறவுள்ளது. இதில் பக்தா்கள் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் லலிதா சஹஸ்ரநாம வேள்வி நடைபெறும் நாளில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கடைசி வெள்ளியான ஆக.13 ஆம் தேதி நடைபெறும் வெள்ளித்தேரோட்டம் தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் முறைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு கோயில்களிலும் கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் வெள்ளித்தோ் உலா இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது பக்தா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com