ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.9 கோடியில் பல்வேறு பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9 கோடி செலவில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
சத்திரப்பட்டியில் காவிரி கூட்டுகுடிநீா் திட்ட குடிநீா் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அமைச்சா் அர.சக்கரபாணி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அம்பிளிக்கை ஆலயகவுண்டன்பட்டியில் ரூ.1.50 கோடியிலும், ராமபட்டிணம் புதூா் மலை அடிவாரம் முதல் பெரியாா் நகா் வரை ரூ.7 கோடியிலும் சாலை தரம் உயா்த்தவும், பெரியகோட்டை ஆதிதிராவிடா் காலனியில் ரூ.30 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைக்கவும், சத்திரப்பட்டி முதல் சிந்தலவாடம்பட்டி வரை ரூ.22 லட்சத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கான புதிய பைப் லைன் அமைக்கவும் என மொத்தம் ரூ.9.02 கோடி செலவில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். மேலும் சத்திரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுகுடிநீா் திட்ட குடிநீா் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், சுரேஷ் கண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் க.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் காயத்ரி தா்மராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சங்கீதா பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com