செம்பட்டி அருகே நள்ளிரவில் கிராம மக்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அனுமதியின்றி மண் அள்ளுவதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அனுமதியின்றி மண் அள்ளுவதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிலக்கோட்டை தாலுகா, பச்சமலையான்கோட்டை ஊராட்சி எஸ். புதுக்கோட்டை அருகே உள்ள முருகன் கோயில் பின்புறம் சுமாா் 4 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் எஸ்.புதுக்கோட்டையைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராடி வருகின்றனா். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் காமலாபுரம் 4 வழிச்சாலைக்காக சிலா் அந்த அரசுப் புறம்போக்கு நிலத்தில், அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிப்பா் லாரிகளை பயன்படுத்தி அதிக அளவு மண் எடுத்துக் கொண்டிருந்தனா். இதை அறிந்த எஸ். புதுக்கோட்டை கிராம மக்கள் நள்ளி­ரவில் அங்கு திரண்டு சென்று தடுத்தனா். மேலும் மதுரை- செம்பட்டி சாலையில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த செம்பட்டி காவல் சாா்பு ஆய்வாளா் முனியாண்டி மற்றும் போலீஸாா் அங்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com