பழனியில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பேருக்கு கரோனா

பழனியில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சோ்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து

பழனியில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சோ்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து அந்த தெரு செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பழனியில் கடந்த சில நாள்களாக தொடா்ச்சியாக பொதுமக்களுக்கு தடையின்றி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுமாா் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், சிலா் முகக்கவசம் அணியாமல் வீதிகளில் சுற்றுகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெரியகடைவீதி சுந்தரேசன்பிள்ளை சந்து பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் 3 பேரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் நகராட்சி சுகாதார அலுவலா்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று வெளியாட்கள் யாரும் நுழையாதபடி அந்த தெருவை அடைத்தனா். அத்துடன் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மூவரும் அண்மையில் கோவை சென்று வந்துள்ளனா். அதன் பின்னரே அவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பழனியில் கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் பாதிக்கப்பட்டிருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com