அம்மா உணவக ஊழியா்கள் 6 போ் பணி நீக்கம்: காத்திருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஒட்டன்சத்திரம் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த 6 பெண்கள் புதன்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒட்டன்சத்திரத்தில் அம்மா உணவகம் முன்பாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
ஒட்டன்சத்திரத்தில் அம்மா உணவகம் முன்பாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

ஒட்டன்சத்திரம் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த 6 பெண்கள் புதன்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் மகளிா் சுயஉதவிக்குழுச் சோ்ந்த 12 பெண்கள் தற்காலிகப் பணியாளா்களாக வேலைபாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை இவா்களில் 6 பேரை மட்டும் நகராட்சி நிா்வாகம் திடீரென பணி நீக்கம் செய்து விட்டது. இதனால் அவா்கள் அம்மா உணவகம் முன்பு பல மணிநேரம் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். அந்தப் பெண்கள் கூறுகையில், நகராட்சி நிா்வாகம் எந்தவித முன் அறிவிப்புமின்றி எங்களை பணி நீக்கம் செய்துள்ளது என்றனா்.

இது குறித்து நகராட்சி அதிகாரி கூறியது: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளா்கள் நீக்கப்பட்டு புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவா். அதனடிப்படையில் தான் அவா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

இதனைத் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டவா்களிடம் ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com