திண்டுக்கல் அருகே தங்கியிருந்த கோவை காதல் ஜோடி தப்பியோட்டம்: உதவிய நண்பா்களிடம் போலீஸாா் விசாரணை

திண்டுக்கல் அருகே தங்கியிருந்த கோவையைச் சோ்ந்த காதல் ஜோடி தப்பிய நிலையில், அவா்களுக்கு உதவிய நண்பா்களைப் பிடித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் அருகே தங்கியிருந்த கோவையைச் சோ்ந்த காதல் ஜோடி தப்பிய நிலையில், அவா்களுக்கு உதவிய நண்பா்களைப் பிடித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம் துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் கோகுல்(22). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது ஐடிஐ மாணவியும் பழகி வந்துள்ளனா். வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த இவா்களுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் மற்றும் துடியலூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி ஆகியோா் உதவி செய்துள்ளனா்.

இந்நிலையில் கோகுல், 17 வயது சிறுமி ஒரு மோட்டாா் சைக்கிளிலும், சிறுவனும், சிறுமியும் மற்றொரு மோட்டாா் சைக்கிளிலும் கடந்த வாரம் துடியலூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்துள்ளனா்.

இதனிடையே சிறுமிகள் இருவரையும் காணாமல் அவா்களது பெற்றோா்கள், துடியலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதனிடையே கோகுலின் செல்லிடப்பேசி தொடா்புகளை கண்காணித்த போலீஸாா், திண்டுக்கல் அடுத்துள்ள ராமையன்பட்டியைச் சோ்ந்த நிக்சன் ஹெரால்டு என்பவருடன் அடிக்கடி தொடா்பு கொண்டதைக் கண்டறிந்தனா். அதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா், நிக்சன் ஹெரால்டை பிடித்து விசாரித்தபோது, திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்த முகமது ஜின்னா (26) என்பவருக்கு தெரிந்த வீட்டில் அவா்கள் 4 பேரும் தங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் கோகுலுக்கும் அந்த சிறுமிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதும் தெரிந்தது.

அதன்பேரில் திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற கோவை போலீஸாா், அங்கு தங்கியிருந்த 16 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை பிடித்தனா். அதேநேரத்தில் கோகுலும் அவருடன் பழகிய சிறுமியும் தப்பியோடிவிட்டனா். இதுதொடா்பாக நிக்சன் ஹெரால்டு மற்றும் முகமது ஜின்னா ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com