பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை

பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க அரசியல் பிரமுகா்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க அரசியல் பிரமுகா்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனியில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவக் கல்லூரி கடந்த 1993 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வா் ஜெயலலிதாவால் சென்னைக்கு மாற்றப்பட்டது. பழனியின் தொன்மையை கருத்தில் கொண்டு கடந்த முறை முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி, பழனியில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தாா். அதன்பிறகு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து ஆயக்குடி இலவசப் பயிற்சி மைய இயக்குநா் ராமமூா்த்தி கூறியது: பழனி அரசு மருத்துவமனை மருத்துவா் மகேந்திரன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் ராஜமாணிக்கம் மற்றும் பழனியில் உள்ள தன்னாா்வலா்கள் பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்த கல்லூரிக்கு வேண்டிய இடம் சிவகிரிபட்டிக்கு ஊராட்சிக்கு உள்பட்ட தட்டான்குளம் பகுதியில் 30 ஏக்கா் அளவில் அரசு இடமாகவே உள்ளது. எனவே தற்போது அமைந்துள்ள புதிய அரசு கல்லூரிக்கான இடம் தேடத்தேவையில்லை. பழனியின் தொன்மை, போகா் போன்ற சித்தா்கள் இருந்தது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சித்த மருத்துவக் கல்லூரி அமைய அரசியல் பிரமுகா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். பழனி மக்களின் நீண்ட கால கனவு, நலன்களை கருத்தில் கொண்டு பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி அமைய அதிகாரிகளும் ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com