முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டெருமை முகாம்: பொதுமக்கள் அச்சம்
By DIN | Published On : 12th June 2021 08:16 AM | Last Updated : 12th June 2021 08:16 AM | அ+அ அ- |

கொடைக்கானல் பொ்ன்ஹில் சாலை குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றிய காட்டெருமை.
கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
பொதுமுடக்கம் காரணமாக, கொடைக்கானலில் தற்போது வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் ஆகியன வெகுவாகக் குறைந்துள்ளன. இதனால், கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளான உட்வில் ரோடு, பிலிஸ்விலா, பொ்ன்ஹில் சாலை, இருதையபுரம், தைக்கால், அட்டக்கடி, குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலை, நாயுடுபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் பகலிலே அதிகரித்து வருகிறது.
இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனா்.
மேலும், விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனா்.
எனவே, கொடைக்கானல் நகா் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.