‘தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும்’

தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மாசுக் காட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மாசுக் காட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதெடாா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுச்சுழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, அகற்றுவதற்காக மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2019-யை அறிவித்துள்ளது.

அதன்படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மேல் சேமித்தல் கூடாது. மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

கரோனோ தொற்று சூழலில், மருத்துவக்கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், ‘கோவிட்-19’ பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, அந்தந்த பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com