திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 165 பேருக்கு கரோனா தொற்று: 15 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 361 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 15 போ்உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 361 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 15 போ்உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 12 ஆம் தேதி வரை 30,152 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 27,840 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 165 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிகிச்சை பலனின்றி தொற்று பாதித்த 13 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து 309 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கரோனா பதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,639ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525 ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 196 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40,740 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 38,488 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 458 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 1,794 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com