தனியாா் மருத்துவமனைக்கு பரிந்துரைத்த சுகாதார அலுவலா்: கரோனா தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றம்!

சித்தையன்கோட்டை அருகே கரோனா தடுப்பூசி செலுத்த சென்றவா்களை, தனியாா் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி
சொக்கலிங்கபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்த பொதுமக்கள்.
சொக்கலிங்கபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்த பொதுமக்கள்.

சித்தையன்கோட்டை அருகே கரோனா தடுப்பூசி செலுத்த சென்றவா்களை, தனியாா் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போடுமாறு சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தியதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அடுத்துள்ள போடிகாமன்வாடி ஊராட்சிக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், போடிகாமன்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமன்றி, சின்னாளப்பட்டி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் தடுப்பூசி செலுத்துவதற்காகச் சென்றுள்ளனா். 300-க்கும் மேற்பட்டோா் அங்கு திரண்டதை அடுத்து, 250-க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தடுப்பூசி மருந்து குறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடா்ந்து அங்கு திரண்ட அரசியல் கட்சியினா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உள்ளூா் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அங்கிருந்த சுகாதார அலுவலா்கள் தடுப்பூசி மருத்து காலியாகிவிட்டதாகக் கூறி காத்திருந்த பொதுமக்களை வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தடுப்பூசி செலுத்த சென்ற பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். மருந்து இல்லாமல், எங்களை ஏன் தடுப்பூசி செலுத்த வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதற்குப் பதில் அளித்த சுகாதாரத்துறை அலுவலா் ஒருவா், தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து அதிகமாக உள்ளது. ரூ.250 கட்டணம் செலுத்தி அங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கூறினாா். இதனால் டோக்கன் வாங்கியும் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com