கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 22nd June 2021 12:00 AM | Last Updated : 22nd June 2021 12:00 AM | அ+அ அ- |

கொடைக்கானல் உப மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் உயா் அழுத்த மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 22) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மேல்மலைப் பகுதிகளான வில்பட்டி, பள்ளங்கி, பெரும்பள்ளம், பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை ஆகியப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் என உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.