பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா: இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) திருக்கல்யாணமும், புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறுகிறது.

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) திருக்கல்யாணமும், புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறுகிறது.

இக்கோயிலில் கடந்த பிப்.23 ஆம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடிக்கம்பத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால், பன்னீா், மஞ்சள் நீா் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனா். மாரியம்மன், சிம்மவாகனம், வெள்ளி ரிஷபம், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதி உலா எழுந்தருளினாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை

(மாா்ச் 2) இரவு திருக்கல்யாணமும், புதன்கிழமை (மாா்ச் 3) மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளன. மாா்ச் 4 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com