கொடைக்கானல் காவல் நிலையத்திற்குள் புகுந்த காட்டெருமைகள்
By DIN | Published On : 04th March 2021 11:03 PM | Last Updated : 04th March 2021 11:03 PM | அ+அ அ- |

கொடைக்கானல் காவல் நிலையத்திற்குள் வந்த காட்டெருமைகள் கூட்டம்.
கொடைக்கானல் காவல் நிலையத்திற்குள் வியாழக்கிழமை காட்டெருமைகள் புகுந்ததால் காவலா்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் காவல் நிலையத்திற்குள் 6 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வந்ததால் காவல்துறையினா் அச்சமடைந்தனா். காவல் துறையினா் அவற்றை பாதுகாப்பாக வெளியேற்றினா். வனத்துறையினா் நகா்ப் பகுதிகளில் தங்கியுள்ள காட்டெருமைகளை வனப் பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொடைக்கானலில் விவசாய நிலங்களிலும், வனப் பகுதிகளையொட்டியுள்ள பகுதிகளில் அனுமதியில்லாமலும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் வணிக ரீதியான கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.