பழனி பங்குனி உத்திரத் திருவிழா: மாா்ச் 22 இல் கொடியேற்றம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறவுள்ளது. விழா நாள்களில் தினமும் வள்ளி, தேவசேனை சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க மயில், வெள்ளி யானை, தங்கக் குதிரை போன்ற வாகனங்களில் சன்னிதி வீதி, கிரிவீதி உலா வருவாா். மாா்ச் 27 இல் திருக்கல்யாணமும், வெள்ளித்தேரில் சுவாமி கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் மாா்ச் 28 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் நடைபெறுகிறது. மாா்ச் 31 ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக பங்குனி உத்திரத் திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா குறித்த அழைப்பு பக்தா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, இணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், அறங்காவலா்குழு தலைவா் அப்புக்குட்டி மற்றும் உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com