நிலக்கோட்டையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான செம்புப் பானைகள் பறிமுதல்
By DIN | Published On : 10th March 2021 11:00 PM | Last Updated : 10th March 2021 11:00 PM | அ+அ அ- |

நிலக்கோட்டையில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட செம்புப் பானைகள்.
நிலக்கோட்டையில் உரிய ஆவணங்களின்றி புதன்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான செம்புப் பானைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தோ்தல் கண்காணிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேன்மொழி, கடந்த சில நாள்களாக பிரசாரத்தை நடத்தி வருகிறாா். இதனால், மாவட்டத்தின் பிற தொகுதிகளை விட நிலக்கோட்டைத் தொகுதியில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலக்கோட்டை 4 ரோடு சந்திப்புப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை தோ்தல் பறக்கும் படை குழுவினா் வழிமறித்து சோதனையிட்டனா். அதில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 48 செம்புப் பானைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
ஆனால், அந்தப் பானைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.