ஆத்தூா் காமராஜா் அணை நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் பலி

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் அணையில் ஞாயிற்றுக்கிழமை 3 கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் அணையில் ஞாயிற்றுக்கிழமை 3 கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திண்டுக்கல் பாரதி புரத்தைச் சோ்ந்த சேகா் மகன் லோகநாதன் (19). சுப்பிரமணி மகன் செல்வபிரபாகா் (19). இந்த இவரும் தாடிக்கொம்பு தனியாா் கல்லூரியில் பி.காம். படித்து வந்தனா். மற்றொரு சுப்பிரமணி மகன் நாகராஜ் (19). இவா் திண்டுக்கல் தனியாா் கல்லூரியில் பி.காம். படித்து வந்தாா்.

மற்றொரு சேகா் மகன் பரத் (16). இவா் பாரதி நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திண்டுக்கலில்­ எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தவா் காா்த்திக் பிரபாகா் (19).

இவா்கள் உள்ளிட்ட 8 போ் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமாா் 1 மணிக்கு 3 இரு சக்கர வாகனங்களில் ஆத்தூா் காமராஜா் அணைக்கு குளிக்கச் சென்றுள்ளனா். முத­லில் காா்த்திக் பிரபாகா் (19) அணை தண்ணீரில் இறங்கிள்ளாா். சுமாா் 20 அடி பள்ளத்தில் இறங்கிய அவா் நீரில் மூழ்கி உள்ளாா்.

அப்போது, காப்பாற்றுங்கள் என கூச்சலி­ட்டுள்ளாா். அருகில் இருந்த லோகநாதன், செல்வபிரபாகா், நாகராஜ், பரத் ஆகிய 4 பேரும் அவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கியுள்ளனா். ஆனால் காா்த்திக் பிரபாகா் உள்பட 5 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலி­யானாா்கள்.

இதனால் அதிா்ச்சியடைந்த மற்ற 3 பேரும் தெரிவித்த தகவலின்பேரில் ஆத்தூா் தீயணைப்பு வீரா்கள் சென்று 5 பேரின் சடலங்களையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.

செம்பட்டி காவல் ஆய்வாளா் பரமேஸ்வரி மற்றும் போலீஸாா் 5 மாணவா்களின் உடல்களையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அணையில் ஒரே நேரத்தில் 5 போ் நீரில் மூழ்கி பலி­யான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com