திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 360 கிளைகளைச் சேர்ந்த 1200 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 360 கிளைகளைச் சேர்ந்த 1200 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில், 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சார்பில் மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்து.

அதன்படி திண்டுக்கல் மாட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 360 கிளைகளைச் சேர்ந்த சுமார் 1200 ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திண்டுக்கல் சாலை ரோட்டிலுள்ள ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு ஊழியர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டல அலுவலர் ந.காமாட்சி ராஜன் கூறியதாவது: நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, சமூக நல பாதுகாப்புத் திட்டங்கள் சார்ந்த பணிகளுக்கு தனியார் வங்கிகள் தரப்பில் நிதி வழங்கப்படுவதில்லை. அரசின் நிதியளிக்கும் திட்டம் சார்ந்த அனைத்துபணிகளுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே நிதி உதவி அளித்து வருகின்றன. 

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால், எதிர்காலத்தில் சமூகத்திலுள்ள அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தனியார் மயமாக்கும் முடிவினை கைவிடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். திங்கள்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, காசோலை மற்றும் பணப் பரிமாற்றம் என சுமார் ரூ.75 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com