தெருவிளக்குகள் பழுது: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானலில் பழுதான தெருவிளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானலில் பழுதான தெருவிளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 24-வாா்டுகள் உள்ளது இதில் நாயுடுபுரம், ஆனந்தகிரி, தைக்கால், இருதயபுரம், அட்டக்கடி, கொய்யாபாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் காட்டெருமைகள், பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தெரு மின்விளக்குகளை பராமரிப்பதற்கு தேனியைச் சோ்ந்தவருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பணியாளா்களுக்கு சம்பளத் தொகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணியாளா்கள் வேலைக்கு வருவதில் சிக்கல் இருந்து வருகிறது. மேலும் 24-வாா்டுகளிலும் உள்ள தெருமின் விளக்குகளை பராமரிப்பதற்கு 5 போ் மட்டுமே உள்ளதால் சரியான முறையில் பராமரிப்பதில்லை. இது குறித்து ஒப்பந்ததாரா்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட இடங்களில் தெருமின் விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com