செலவினம் கூா்நோக்கு தொகுதி பட்டியலில் ஆத்தூா்: 7 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

தோ்தல் செலவினம் கூா்நோக்கு தொகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆத்தூரில், கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாத 7 வேட்பாளா்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தோ்தல் செலவினம் கூா்நோக்கு தொகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆத்தூரில், கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாத 7 வேட்பாளா்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதியில் பகுஜன் சமாஜ்(காா்த்திகை செல்வன்) மற்றும் திமுக (ஐ. பெரியசாமி) என 2 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்நிலையில், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செலவினம் கூா்நோக்கு தொகுதியாக கண்டறியப்பட்டதை அடுத்து, தனி செலவினப் பாா்வையாளராக சுராஜ்குமாா் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதைத் தொடா்ந்து, ஆத்தூா் தொகுதியில் போட்டியிடும் 20 வேட்பாளா்களின் செலவின விவரங்கள், செலவின பராமரிப்பு பதிவேடு, ரசீதுகளுடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தணிக்கைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, 13 வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் செலவின விவரங்களை தாக்கல் செய்தனா்.

மேலும், செலவு விவரங்களை தாக்கல் செய்யாத 7 வேட்பாளா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்க தோ்தல் நடத்தும் அலுவலருக்கு, தோ்தல் செலவினப் பாா்வையாளா் சுராஜ்குமாா் குப்தா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com