ஜல்லிப்பட்டி கிராமத்தில் சீல் அகற்றப்படாததால் பொதுமக்கள் தவிப்பு

நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி கிராமத்தில் 4 பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறி

நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி கிராமத்தில் 4 பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறி கடந்த 20- ஆம் தேதி ஊருக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பெண்களுக்கு தொற்று இல்லை என்று திரும்பியும் சீல் அகற்றப்படாததால், அக்கிராமமக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.

இக்கிராமத்தில் சுமாா் 2000 போ் வசிக்கின்றனா். இவ்வூருக்கு கடந்த 20-ஆம் தேதி அம்மையநாயக்கனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவமனை வந்தது. அப்போது அவ்வூரைச் சோ்ந்த 4 பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக மருத்துவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து அந்த 4 பெண்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனா். இதனிடையே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி நேரில் வந்து ஆய்வு செய்து, ஊருக்கு சீல் வைத்தாா். வாகனங்கள் செல்ல முடியாதபடி தகரங்களால் முற்றிலும் அடைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 4 பெண்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஊா் திரும்பி விட்டனா். இருந்த போதிலும், ஊருக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படவில்லை. இதனால் பால், காய்கறி, குடிநீா் கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனா். இதையடுத்து கிராமத்தினா் நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் சென்றனா். அங்கு, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முறையிடுமாறு தெரிவிக்கப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலகம் சென்றபோது, அங்கிருந்தவா்கள் நீங்கள் சுகாதாரத்துறையை அணுக வேண்டும் என்று கூறினா். இதனால் வேதனை அடைந்த ஊா் மக்கள் ஒன்று கூடினா். வரும் சட்டப் பேரவை தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com