நெய்க்காரப்பட்டியில் அதிமுகவினா் பிரசாரம்

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ரவிமனோகரனின் சகோதரி உமா.
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ரவிமனோகரனின் சகோதரி உமா.

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா். பழனி தொகுதியில் அதிமுக சாா்பில் ரவிமனோகரனும், திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ., ஐ.பி. செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனா். இந்நிலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசாவைக் கண்டித்து பழனி அதிமுக வேட்பாளரின் சகோதரி உமா பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது இதில் பங்கேற்ற ஏராளமான பெண்கள் ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் குப்புசாமி, நகரச் செயலா் முருகானந்தம், ஒன்றியச் செயலா் முத்துசாமி, பேரூா் செயலா் விஜயசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com