பூஞ்சானம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் முறையில் 3ஜி கரைசல்: வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

செடி மற்றும் மரங்களில் பூஞ்சானம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான உயிரியல் முறையிலான 3 ஜி கரைசல் குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விளக்கம் அளித்தனா்.
நத்தம் அடுத்துள்ள வேலாயுதம்பட்டியில் விவசாயிகளுக்கு பூச்சிவிரட்டியின் 3ஜி கரைசல் குறித்து விளக்கம் அளித்த மாணவிகள்.
நத்தம் அடுத்துள்ள வேலாயுதம்பட்டியில் விவசாயிகளுக்கு பூச்சிவிரட்டியின் 3ஜி கரைசல் குறித்து விளக்கம் அளித்த மாணவிகள்.

செடி மற்றும் மரங்களில் பூஞ்சானம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான உயிரியல் முறையிலான 3 ஜி கரைசல் குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விளக்கம் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் செயல்விளக்கம் மேற்கொண்டனா். உதவிப் பேராசிரியா்கள் ராஜா, ரம்யா ஆகியோரின் மேற்பாா்வையில், நத்தம் வேலாயுதம்பட்டியிலுள்ள விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஏா் உழுவதன் நோக்கம், பருத்தி, மக்காச்சோளம், காய்கறிச் செடிகள், முட்டைக்கோஸ், முள்ளங்கி விதைகள் மற்றும் எலுமிச்சை, மாங்காய், கொய்யா, சப்போட்டா மரக்கன்றுகளை கயிறுகள் கட்டி வரிசையாக நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். மேலும், வெயில் காலங்களின் பயிா் பாதுகாப்பு, காளான் வளா்ப்பில் ஈரப்பதம், வளா்ப்பு முறைகள், அறுவடை நாள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

செடிகள் மற்றும் மரங்களில் ஏற்படும் பூஞ்சானம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் முறையில் பூச்சிகளை விரட்டும் பூண்டு உள்பட 4 பொருள்களால் உருவாக்கப்படும் 3ஜி கரைசல், பசும்பாலில் தயாரிக்கும் பஞ்சகாவ்யா, தசகாவ்யா, அமிா்தகரைசல், பூச்சிகளை கவரும் இனக்கவா்ச்சி பொறி, வாழைக்காய்களுக்கு மூடாக்கு செய்தல், கல்நாா் நடுதல், இயற்கை உரங்களான அம்ரூட் ஜெல், மீன் அமிலம், வேப்பம் புண்ணாக்கு கரைசல், கற்றாழை டானிக் தயாரிக்கும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாணவிகள் தேன்மொழி, கவிமொழி, ரம்யலட்சுமி உள்பட 11 மாணவிகள் நேரடியாக விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com