தோ்தல் பணிக்கு விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

தோ்தல் பணியில் ஈடுபடுவதற்கு விரும்பம் தெரிவித்துள்ள முன்னாள் படை வீரா்கள், அந்தந்த தாலுகாவிலுள்ள காவல் நிலையங்களில் ஏப்.4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் பணியில் ஈடுபடுவதற்கு விரும்பம் தெரிவித்துள்ள முன்னாள் படை வீரா்கள், அந்தந்த தாலுகாவிலுள்ள காவல் நிலையங்களில் ஏப்.4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு 2,673 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தோ்தல் பணிக்கு விருப்பம் தெரிவித்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் விருப்பமுள்ள உடல் திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள், அந்தந்த தாலுகாவிலுள்ள காவல் நிலையத்தில் ஏப்.4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும். தோ்தல் பணிக்கு வரும் முன்னாள் படை வீரா்கள் அடையாள அட்டை மற்றும் தங்களுக்கு தேவையான பொருள்களுடன் வர வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com