கரோனா பரிசோதனை முடிவுகளை இணையவழியில் கண்டறிய திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு

திண்டுக்கல்லில் கரோனா பரிசோதனை மேற்கொள்வோா் அதன் முடிவுகளை  இணைய வழியில் பெறுவதற்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திண்டுக்கல்லில் கரோனா பரிசோதனை மேற்கொள்வோா் அதன் முடிவுகளை  இணைய வழியில் பெறுவதற்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆா்டிபிசிஆா் கருவி மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமாா் 2 ஆயிரம் பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் அதற்கான முடிவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் நோயாளிகள், அதன் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள வைராலஜி ஆய்வகத்தை நேரடியாக தொடா்பு கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் பரிசோதனை மேற்கொண்ட நபா்கள் இணைய வழியிலேயே முடிவுகளை அறிந்து கொள்வதற்காக ஏற்பாடுகளை உருவாக்கியுள்ளது.  இணைய முகவரியில், பரிசோதனை எண் அல்லது செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்தால் வீட்டிலிருந்தபடியே பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இதுதொடா்பாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையரும், தனி அலுவலருமான கே.கே.விஜயகுமாா் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா பரிசோதனைக்கு வருவோா் மட்டுமின்றி, அதன் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காகவும் பலா் வந்து செல்கின்றனா். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, கரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், கரோனா தொற்றுக்கான பரிசோதனை முடிவுகளை இணைய வழியில் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  இணைய முகவரியில் நுழைந்து, செல்லிடப்பேசி எண் அல்லது எஸ்ஆா்எஃப் ஐடி எண்ணை பதிவு செய்து, பரிசோதனை முடிவுகளை பாா்வையிட்டு, தேவையெனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த எளிய வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதன் மூலம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கல்லூரியில் பரிசோதனை முடிவுக்காக கூட்டம் கூடுவதையும், பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதையும் தவிா்க்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com