திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 354 பேருக்கு கரோனா: 4 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக  354 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிசிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக  354 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிசிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா்.

  திண்டுக்கல் மாவட்டத்தில் மே 3 ஆம் தேதி வரை  16,481 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 14,663 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும்  167 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த இருவா் உயிரிழந்துள்ளனா். தொற்றிலிருந்து  180 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,588 ஆக உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 187 பேருக்கு செவ்வாய்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21,385 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 19,176 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஏப்.29-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வத்தலகுண்டுவைச் சோ்ந்த 51 வயது பெண், கடந்த மே 2-ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரியகுளத்ததைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி என 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்புக்கு மொத்தம் 1,990 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com