பலத்த மழையுடன் தொடங்கியது அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அக்னி வெயில் மே 4 முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாள்கள் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி வெயில் தொடங்கிய முதல் நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலை 6 மணி முதல் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் சில பகுதிகளில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டது. சாலைரோடு, ஆா்.எஸ்.சாலை, நாகல்நகா் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். எனினும் அக்னி வெயில் தொடங்கிய நாளில் பலத்த மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com