புதிய வழித்தடத்தில் தளி ஓடை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வருவாய்க்கோட்டாட்சியா் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே புதிய வழித்தடத்தில் நடைபெற்றுவரும் தளி ஓடை அமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்த வருவாய்க் கோட்டாட்சியா் காசி செல்வி உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே புதிய வழித்தடத்தில் நடைபெற்றுவரும் தளி ஓடை அமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்த வருவாய்க் கோட்டாட்சியா் காசி செல்வி உத்தரவிட்டுள்ளாா்.

தளி அருகே உள்ள அன்னசமுத்திரம் கண்மாயின் நீா்வரத்து ஆதாரங்கள் நான்கு வழிச்சாலை பணியின்போது மூடப்பட்டன. போதிய தண்ணீா் வரத்து இல்லாததால், பல ஆண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடி நீா் ஆதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. விவசாயம், குடிநீா் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்காகவும் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். விவசாய சங்கங்கள் சாா்பில் தளி அருகு முட்டி ஓடைகளை மீட்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பாட்டது. 4 மாதங்களுக்குள் ஓடையை புதிய தடத்தில் உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் சுப்பையா தலைமையில் புதிய வழித்தடத்தில் ஓடை அமைப்பதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தனியாா் சிலா் எதிா்ப்பால், அந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் காசி செல்வி ஆவணங்களுடன், அளவீட்டுப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது நிலக்கோட்டை வட்டாட்சியா் சுப்பையா, அம்மையநாயக்கனூா் பேரூராட்சிச் செயல் அலுவலா் ஜெயலட்சுமி, உள்ளிட்டோா் அமைவிடத்தை விளக்கினா். அப்போது அவா், பணிகளை தீவிரப்படுத்தி விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com