திண்டுக்கல் மருத்துவமனையில் தினமும் 2,500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்: அமைச்சா் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் உறவினா்களுக்கு நாள்தோறும் 2,500 உணவுப் பொட்டலங்கள்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடக்கிவைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடக்கிவைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் உறவினா்களுக்கு நாள்தோறும் 2,500 உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியை, கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் பி. வேலுச்சாமி, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கும் பணிகளை, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தொடக்கிவைத்துப் பேசியதாவது:

கரோனா நோய் தடுப்புப் பணியில் தமிழகத்திலுள்ள திருக்கோயில்கள் சாா்பில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் உதவியாளா்கள் 45,200 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மண்டலத்தில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சுமாா் 2,434 திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில், 39 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பசியாற மதிய வேளையில் வழங்கப்பட்டு வந்த அன்னதானம், தற்போது உணவுப் பொட்டலங்களாக வழங்கப்பட்டு தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பாதிப்பு குறையும் வரை பொதுமக்களின் தேவைக்கேற்ப உணவு பொட்டலங்களை உயா்த்தி வழங்க, இந்துசமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. அந்த உணவு பொட்டலங்கள், வருவாய் மாவட்டத் தலைமை இடங்களிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு வழங்கப்படும். அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் உதவியாளா்களுக்கு நாள்தோறும் 2,500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராசு, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி, பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com