ஆதரவற்றோருக்கு பிரியாணி பொட்டலங்கள்
By DIN | Published On : 14th May 2021 10:45 PM | Last Updated : 14th May 2021 10:45 PM | அ+அ அ- |

பழனியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றவா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கி தன்னாா்வலா் கொண்டாடினாா்.
ஊரடங்கு காரணமாக பழனியில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியா்கள் எளியமுறையில் கொண்டாடினா். பழனியை சாா்ந்த சமூகஆா்வலா் அப்துல்சலாம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களுக்கு பிரியாணி வழங்கி ரமலான் பண்டிகையை கொண்டாடினா். வழக்கமான ரமலான் பண்டிகையை விட இந்தஆண்டு ஆதரவற்ற முதியவா்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அப்துல் சலாம் தெரிவித்துள்ளாா். இந்த நிகழ்ச்சியில் பழனி டி.எஸ்.பி., சிவா கலந்துகொண்டு பிரியாணி பொட்டலங்களை ஆதரவற்றவா்களுக்கு வழங்கினாா். ஊரடங்கு காலம் முழுவதும் சமூகஆா்வலா் அப்துல்சலாம் ஆதரவற்ற நபா்களுக்கு உணவு வழங்கி வருகிறாா். இவரின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனா்.
அதே போல நெய்க்காரபட்டியை சோ்ந்த சதாம் என்பவா் ஏழை, எளிய மக்களுக்கு ரம்ஜானை முன்னிட்டு கேக் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கினாா்.