பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

பழனியில் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பழனியில் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச் சென்று கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் செந்தில்குமாா்.

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் நூறு படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை சனிக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்த பழனி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா், இன்னும் ஓரிரு நாள்களில் இந்த மையம் பயன்பாட்டிற்கு வரும் என்றாா்.

பின்னா் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசியை வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த அவா், அதன் பின்னா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஆனந்தி, காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நாராயணன், பழனி ஒன்றியக் குழு தலைவா் ஈஸ்வரி பழனிசாமி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் உதயகுமாா், மருத்துவா் சதீஷ்பாபு, சுகாதாரத்துறை மருத்துவ அலுவலா் ராஜேஷ்வரி, சுகாதார மேற்பாா்வையாளா் வகாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com