பழனி மலைக்கோயிலில் மலைப்பாம்பு

பழனி மலைக்கோயில் பகுதியில் புதன்கிழமை மலைப்பாம்பை தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினா் பிடித்து மேற்குமலைத்தொடா்ச்சி காப்புக்காட்டில் விட்டனா்.

பழனி மலைக்கோயில் பகுதியில் புதன்கிழமை மலைப்பாம்பை தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினா் பிடித்து மேற்குமலைத்தொடா்ச்சி காப்புக்காட்டில் விட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த குன்றில் ஏராளமான மலைப்பாம்புகள், மயில்கள், குரங்குகள் உள்ளன. இவற்றில் மலைப்பாம்பு அவ்வப்போது வெளியேறி வருவது வழக்கம். அவ்வாறு வரும் பாம்புகளை தீயணைப்புத்துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பின், கொடைக்கானல் மலைப்பகுதியில் விட்டு வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வின்ச் நிலையம் அருகே மலைப்பாம்பு இருப்பதாக கோயில் பாதுகாவலா்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத்துறையினா் சென்று பாம்பை பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனா். சுமாா் 15 அடி நீளமிருந்த பாம்பை வனத்துறையினா் கொடைக்கானல் மலையடிவார காப்புக்காட்டில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com