அரசு கள்ளா் விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதி வாய்ந்த மாணவா்கள் நவ. 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதி வாய்ந்த மாணவா்கள் நவ. 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்திருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 7 அரசுக் கள்ளா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு 5 விடுதிகளும், மாணவிகளுக்கு 2 விடுதிகளும் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தங்கி படிக்கலாம். கள்ளா் சீரமைப்பு விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சோ்ந்த மாணவா் மற்றும் மாணவியா்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுவா். அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். மலைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கும் மாணவா்களுக்கு கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சோ்வதற்கான தகுதிகள்: பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு கூடுதலாக இருக்க வேண்டும். தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள இணை இயக்குநா் (கள்ளா் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் போது, ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் நேரத்தில் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை நவ. 22ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பினை அந்த மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com