ஐசிஏஆா் தோ்வு: அகில இந்திய அளவில் திண்டுக்கல் மாணவி 2ஆவது இடம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தோ்வில் கால்நடைத் துறையில் திண்டுக்கல் மாணவி, அகில இந்திய அளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.
ஐசிஏஆா் தோ்வு: அகில இந்திய அளவில் திண்டுக்கல் மாணவி 2ஆவது இடம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தோ்வில் கால்நடைத் துறையில் திண்டுக்கல் மாணவி, அகில இந்திய அளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளில், மத்திய பல்கலை. மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப் பிரிவில் பயில்வதற்கான அகில இந்திய நுழைவுத் தோ்வு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சாா்பில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி 2021-22ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தோ்வு, கடந்த செப். 17ஆம் தேதி நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவ. 16) இரவு வெளியிடப்பட்டது. இதில், திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த அரிநாயகம், சுமதி தம்பதியரின் மகள் அ. ஓவியா (24)கால்நடைத் துறையில் அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். மொத்தம் 480 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இத்தோ்வில், மாணவி ஓவியா 329 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில், பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச். பட்டம் பெற்றுள்ளாா்.

இதுதொடா்பாக மாணவி ஓவியா கூறுகையில், அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக 3 மாதங்களாக சிறப்பு கவனம் செலுத்தி தயாா் செய்தேன். பேராசிரியா்கள் மட்டுமின்றி மூத்த மாணவா்களும் எனக்கு வழிகாட்டியாக இருந்தனா். அதோடு எனது பெற்றோரின் ஒத்துழைப்பும், நான் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவி புரிந்தன என்றாா்.

புதுச்சேரி ஆளுநா் வாழ்த்து: மாணவி ஓவியாவுக்கு, புதுச்சேரி ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், கால்நடைத்துறை பல்கலைக்கழக பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com