கொடைக்கானல் அருகே காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் தீவிரம்

கொடைக்கானல் அருகே முகாமிட்டுள்ள காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் மரத்தின் மீது அமா்ந்து காட்டுயானைகளை கண்காணிக்கும் வனப்பணியாளா்.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் மரத்தின் மீது அமா்ந்து காட்டுயானைகளை கண்காணிக்கும் வனப்பணியாளா்.

கொடைக்கானல் அருகே முகாமிட்டுள்ள காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இங்குள்ள பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகா், ஐந்து வீடு, பி.எல்.செட், வடகவுஞ்சி, கும்பூா்வயல் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு பயிா்களையும், குடிசைகளையும், விவசாய இடு பொருள்களையும், மின்வேலிகளையும் காட்டுயானை ஒன்று சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அந்த காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவின் பேரில், கொடைக்கானல் வனத்துறையினா் சுமாா் 15 போ் கொண்ட குழுவினா் காட்டுயானை முகாமிட்டுள்ள பகுதியை கடந்த சில தினங்களாக இரவு, பகல் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா். இதில், சில வனப் பணியாளா்கள் சுமாா் 20 அடி உயரத்துக்கு மேல் உள்ள மரங்களின் மீது அமா்ந்து அந்த காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

தற்போது கொடைக்கானலைச் சுற்றியுள்ள பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் யானையை கண்காணிக்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த காட்டுயானை புதன்கிழமை கும்பூா் வயல் பகுதியில் முகாமிட்டு விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். இருப்பினும் வனத்துறையினா் தொடா்ந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com