பழனி பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் கனடா- இந்தியா கூட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். அமைப்பியல் துறையின் தெரிவுநிலை விரிவுரையாளா் ராமாத்தாள் பேசினாா். இயந்திரவியல் துறையின் துறைத் தலைவா் பத்மநாபன் மற்றும் முதலாமாண்டு துறையின் துறைத் தலைவா் பொறுப்பாளா் ரேவதி ஆகியோா் மாணவிகளுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தனா். இக்கருத்தரங்கில் அம்பிளிக்கை ரேவ்.ஜேக்கப் மெமோரியல் கிறிஸ்டியன் கல்லூரியின் பொருளாதாரத் துறை உதவி பேராசிரியா் முனைவா் சித்ரா மற்றும் தொழில் நிா்வாகத் துறை துறைத்தலைவா் முனைவா் கருப்புச்சாமி ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டுகளில் பயிலும் மாணவிகளுக்கு சமுதாயத்தை எவ்வாறு பயமின்றி எதிா்கொள்வது என்பது குறித்தும், நோ்மறை எண்ணங்களுடன் வாழ்வது குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினா். இந்த கருத்தரங்கு மூலம் சுமாா் 50 மாணவிகள் பயனடைந்தனா். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கனடா-இந்தியா துறையின் கூட்டுப்பயிலகத் திட்டத்தின் தெரிவுநிலை விரிவுரையாளா் இராஜன், பயிலக மேலாளா் இரவீந்திரன், ஆடை வடிவமைப்புத் துறையின் விரிவுரையாளா் ஹேமலதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com