Enable Javscript for better performance
திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்துக்குள் கழிவுநீா் புகுந்து பாதிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்துக்குள் கழிவுநீா் புகுந்து பாதிப்பு

    By DIN  |   Published On : 27th November 2021 09:18 AM  |   Last Updated : 27th November 2021 09:18 AM  |  அ+அ அ-  |  

    dgl_commissioner_2611chn_66_2

    கழிவுநீா் கலந்த மழைநீா் சூழ்ந்த திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் வணிகத் துறை ஆணையா் எஸ்.நடராஜன்.

    திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்துக்குள் கழிவுநீா் கலந்த மழைநீா் புகுந்து பாதிப்பு ஏற்பட்டதை, வேளாண் வணிகத் றை ஆணையா் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் சுமாா் 63 செ.மீ. மழை பெய்தது. இதனால், திண்டுக்கல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீா் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், திண்டுக்கல் - வத்தலகுண்டு புறவழிச் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்துக்குள், பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியிலிருந்து மழைநீா் புகுந்தது.

    அதேநேரத்தில், திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் கலந்த மழைநீா் பெருமளவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்துக்குள் புகுந்தது.

    இதனால், நெல் சேமிப்பு கிட்டங்கிகள், குளிா்பதனக் கிட்டங்கி, அலுவலகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளாகமும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மேலும், அலுவலக நுழைவுவாயிலுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 30 அடி அகலம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட உலா் களத்திலும் கழிவுநீா் தேங்கியது.

    இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள், வியாழக்கிழமை நள்ளிரவில் தாழ்வான கிட்டங்கியிலிருந்த சுமாா் 216 நெல் மூட்டைகளை, உயா்வான பகுதிக்கு இடமாற்றம் செய்தனா். இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் தண்ணீரில் மூழ்கியதை அறிந்த வேளாண் வணிகத் துறை ஆணையா் எஸ். நடராஜன், வெள்ளிக்கிழமை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது அவரிடம், வேளாண் விற்பனைக் குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: மழைக் காலங்களின்போது, திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்துக்குள் மாநகராட்சியின் கழிவுநீா் கலந்த மழைநீா் நுழைவது வாடிக்கையாக உள்ளது. வியாழக்கிழமை இரவு மட்டும் சுமாா் 80 லட்சம் லிட்டா் கழிவுநீா் புகுந்துள்ளது.

    இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதிலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனா்.

    இடிந்து விழுந்த சுற்றுசுவா், கழிவுநீருடன் மழைநீா் சூழ்ந்த கிட்டங்கிகள் உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்ட ஆணையா் நடராஜன், இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp