கொடைக்கானல் சாலைகளில் கட்டுமானப் பொருள்கள் குவிப்பு

கொடைக்கானல் பிரதான சாலைகளில் கட்டுமானப் பொருள்களை நீண்ட நாள்கள் குவித்து வைத்திருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
கொடைக்கானல் உகாா்த்தே நகா் பிரதான சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பொருள்கள்.

கொடைக்கானலில் மூஞ்சிக்கல், லஸ்காட் சாலை, உகாா்த்தே நகா், இருதயபுரம், சீனிவாசபுரம், ஆனந்தகிரி ஆகிய பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்குக் தேவையான கட்டுமானப் பொருள்களை பிரதான சாலைகளில் குவித்து வைத்துள்ளனா். அவை பல நாள்களாக அகற்றப்படாமல் உள்ளன. மேலும் செங்கல், ஜல்லி, உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைகளில் குவித்து வைத்து விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதுடன் அடிக்கடி வாகன விபத்துகள்

ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். நகராட்சி நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com