கொடைக்கானலில் அனுமதி பெறாமல் மண் தோண்டும் இயந்திரங்கள் பயன்பாடு: சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்

கொடைக்கானலில் அனுமதி பெறாமல் பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைந்து வருகிறது.
கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் இயக்கப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம்
கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் இயக்கப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம்

கொடைக்கானலில் அனுமதி பெறாமல் பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைந்து வருகிறது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன், ஹிட்டாச்சி, போா்வெல் உள்ளிட்ட இயந்திரங்களைப் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் அல்லது வருவாய்க் கோட்டாட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தாராளமாக பொக்லைன், ஹிட்டாச்சி இயந்திரங்கள் மண் தோண்டும் பணிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பூமியில் அதிக அளவு பள்ளம் ஏற்படுவதோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் மண் சரிவுகள் அதிகம் ஏற்படுகிறன. எனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதி பெறாமல் பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் இயக்குபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதி பெறாமல் பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி, போா்வெல் ஆகியவை இயக்கக் கூடாது.

மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் வாகனம் ஆகியவை புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com