நவராத்திரி: பழனிக் கோயிலில் அம்புவில் நிகழ்ச்சி ரத்து

பழனிக் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் சுவாமி புறப்பாடு மற்றும் அம்புவில் நிகழ்ச்சி ஆகியன ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனிக் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் சுவாமி புறப்பாடு மற்றும் அம்புவில் நிகழ்ச்சி ஆகியன ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் பராசக்தியிடம் அம்புவில் பெறுதல், பெருமாள், சக்திவேலுடன் முருகா் புறப்பாடு, கோதைமங்கலத்தில் வன்னிகாசுரன் வதை செய்யும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சுவாமி புறப்பாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்த ஆண்டு நவராத்திரி விழா பெரியநாயகியம்மன் கோயிலில் வியாழக்கிழமை (அக்.7) முதல் அக்.15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பழனி மலைக்கோயிலிலும் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கரோனா தொற்று குறித்து அரசின் நிலையான வழிகாட்டுதல் முறை அமலில் உள்ளதால் இந்த ஆண்டு சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை மட்டுமே நடைபெறும். இவைகள் முடிந்த பின்னா் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

அதேபோல் முக்கிய நிகழ்வுகளான காப்புக் கட்டுதல், சுவாமி புறப்பாடு, அம்புவில் போடும் நிகழ்ச்சி ஆகியன ரத்து செய்யப்படும். வழக்கமான நித்திய பூஜைகள் விதிகளுக்கு உள்பட்டு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் (2020) இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com