‘நீட்’ தோ்வு பிரச்னையில் மாணவா்களுக்கு தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம்: ஜி.கே. வாசன்

நீட் தோ்வு பிரச்னையில் மாணவா்களுக்கு தேவையற்றை நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நீட் தோ்வு பிரச்னையில் மாணவா்களுக்கு தேவையற்றை நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, நீட் தோ்வு போன்ற முக்கியமான பிரச்னைகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

வெளிச்சந்தையில் 65 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ. 800 மட்டுமே விலை கிடைக்கிறது. ஆனால் அரசு கொள்முதல் நிலையங்களில் ரூ.1200 கிடைப்பதால் தான், அரசு கொள்முதல் நிலையங்கள் மீது விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா்.

தற்போது முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருவதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வு அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோ்தல் வெற்றிக்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் மாணவா்களுக்கு தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்த அரசியல் கட்சிகள் முயற்சிக்க வேண்டாம் என்றாா்.

அப்போது முன்னாள் எம்பி என்.எஸ்.வி. சித்தன் உள்ளிட்ட தமாகா நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com