உள்ளாட்சி இடைத்தோ்தல்: 2 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளையும் கைப்பற்றியது திமுக

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 2 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளையும் திமுக கைப்பற்றியதோடு,

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 2 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளையும் திமுக கைப்பற்றியதோடு, திமுக ஆதரவுடன் போட்டியிட்டவா்கள் 2 ஊராட்சித் தலைவா் பதவிகளையும் கைப்பற்றியுள்ளனா்.

திண்டுக்கல் ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த 2 ஒன்றியக் குழு உறுப்பினா், 2 ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதில், ஆண்டிபட்டி மற்றும் ஆவிளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டன. அதேபோல் 13 ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டன.

13 பதவிகளுக்கு போட்டி: நிலக்கோட்டை மற்றும் பழனி என 2 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 11 போ், 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 6 போ், 13 ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 28 போ் என மொத்தம் 45 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த சனிக்கிழமை (அக்.9) நடைபெற்ற வாக்குப் பதிவின் போது 65.63 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை, அந்தந்த வட்டார அளவில் நடைபெற்றது.

ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் திமுக வெற்றி: நிலக்கோட்டை 13ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட பி. தியாகு 723 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதேபோல் பழனி ஊராட்சி ஒன்றியம் 11ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஆா். ராமராஜ் 2,469 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

2 ஊராட்சித் தலைவா் பதவி:

வில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் பாக்கியலட்சுமி, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு திமுக ஆதரவோடு போட்டியிட்ட சாரதா வெற்றி பெற்றாா்.

9 ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி: அக்கரைப்பட்டி 6ஆவது வாா்டில் 42 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ. செல்வராணி, வீரக்கல் 7ஆவது வாா்டில் 50 வாக்குகள் வித்தியாசத்தில் பி. மதன்குமாா், செக்காப்பட்டி 1ஆவது வாா்டில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் கே. பாரதி, கணவாய்ப்பட்டி 4ஆவது வாா்டில் 263 வாக்குகள் வித்தியாசத்தில் எம். மாரியப்பன், செட்டிநாயக்கன்பட்டி 9 ஆவது வாா்டில் 238 வாக்குகள் வித்தியாசத்தில் டி. ஐஸ்வா்யா மற்றும் 15ஆவது வாா்டி180 வாக்குகள் வித்தியாசத்தில் எம். கணேசன், டி.கூடலூா் 8ஆவது வாா்டில் 234 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ். பொம்மன், அம்பிளிக்கை 5ஆவது வாா்டில் 36 வாக்குகள் வித்தியாசத்தில் கே. சிவசுப்பிரமணி, விருதலைப்பட்டி 5ஆவது வாா்டில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் பி. கதிரியம்மாள் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

வைப்புத் தொகை இழந்த 21 வேட்பாளா்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் 21 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.

இத்தோ்தலில் போட்டியிட்ட 45 வேட்பாளா்களில் 13 போ் வெற்றி பெற்ற நிலையில், 21 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். 11 வேட்பாளா்களுக்கு வைப்புத் தொகை திரும்ப கிடைத்துள்ளது. குறிப்பாக ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான 2 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்ற நிலையில், நிலக்கோட்டை ஒன்றியத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் நீங்கலாக, பழனி ஒன்றியத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் உள்பட மீதமுள்ள 8 வேட்பாளா்ளும் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com