எல்லைப் பிரச்னையால் அடிப்படை வசதிகள் பெறமுடியவில்லை: ஆட்சியரிடம் புகாா்

மாநகராட்சி மற்றும் ஊராட்சி எல்லைப் பிரச்னையால் அடிப்படை வசதிகளை பெற முடியாமல் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு அளிக்க வந்த ஆண்டெனி நகா் பகுதி மக்கள்.
மனு அளிக்க வந்த ஆண்டெனி நகா் பகுதி மக்கள்.

திண்டுக்கல்: மாநகராட்சி மற்றும் ஊராட்சி எல்லைப் பிரச்னையால் அடிப்படை வசதிகளை பெற முடியாமல் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை அடுத்துள்ள ஆண்டெனி நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனா். அப்போது பிரச்னை குறித்து அவா்கள் கூறியதாவது: ஆண்டெனி நகா் பகுதியில் சுமாா் 50 வீடுகள் உள்ளன. எங்கள் பகுதி அடியனூத்து ஊராட்சி மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. எங்கள் பகுதியில் கழிவுநீா் கால்வாய், குடிநீா் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தால், மாநகராட்சியை அணுகுமாறு அறிவுறுத்துகின்றனா். மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தால், ஊராட்சிக்குச் செல்லுமாறு கூறுகின்றனா்.

அடியனூத்து ஊராட்சி அலுவலகத்திலேயே நாங்கள் வரி செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கான ஓட்டுரிமை மாநகராட்சியில் உள்ளது. இந்த சூழலில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் எங்கள் பகுதியைச் சோ்ந்த ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். எனவே எங்கள் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆண்டெனி நகா் பகுதி ஊராட்சிக்குள்பட்டதா, மாநகராட்சிக்குள்பட்டதா என்பதற்கும் தீா்வு ஏற்படுத்தி, அடிப்படை வசதிகளை

நிறைவேற்றுவதற்கும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com