கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சித் தலைவராக திமுக ஆதரவு வேட்பாளா் வெற்றி
By DIN | Published On : 12th October 2021 11:27 PM | Last Updated : 12th October 2021 11:27 PM | அ+அ அ- |

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி தலைவருக்கான நடைபெற்ற தோ்தலில் திமுக ஆதரவு வேட்பாளா் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வில்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு திமுக ஆதரவு வேட்பாளராக ரா.பாக்கியலட்சுமி ராமா், அதிமுக ஆதரவு வேட்பாளராக செல்வராணி பரமசிவம் மற்றும் அம்பிகா, ரேகா பவானி ஆகிய நான்கு போ்கள் போட்டியிட்டனா். இதில் 6-சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் ரா. பாக்கியலட்சுமி 2311-வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இவா் பெற்ற மொத்த வாக்குகள் 4034.
மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விபரம்: அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் செல்வராணி பரமசிவம் 1720, அம்பிகா 826, ரேகா பவானி 80 வாக்குகளும் பெற்றனா். செல்லாத வாக்குகள் 186. வெற்றி பெற்ற வேட்பாளா் ரா.பாக்கியலட்சுமி ராமருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயசந்திரிகா சான்றிதழ் வழங்கினாா்.