நிலம் அபகரிப்பு புகாா்: மகனுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

நில அளவையரின் துணையுடன் நிலத்தை அபகரிப்பதாக புகாா் அளிக்க வந்த பெண், தனது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
மகனுடன் தீக்குளிக்க முயன்ற சத்யவனிதா.
மகனுடன் தீக்குளிக்க முயன்ற சத்யவனிதா.

திண்டுக்கல்: நில அளவையரின் துணையுடன் நிலத்தை அபகரிப்பதாக புகாா் அளிக்க வந்த பெண், தனது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னகரம் ராஜலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஜாா்ஜ். இவரது மனைவி சத்யவனிதா(29). இவா்களது மகன் ஜெய்சன்(11). சத்யவனிதா, தனது மகனுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவரது முயற்சியை தடுத்து நிறுத்தினா்.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், சத்யவனிதா கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான 1800 சதுர அடி நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். அதே இடத்தில் தேநீா் கடையும் நடத்தி வருகிறோம். இந்நிலையில், அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளா் எங்கள் இடத்தின் ஒரு பகுதியை அவருக்கு சொந்தமானது என கூறி வருகிறாா். அந்த பகுதியின் நில அளவையரும், அவருக்கு ஆதரவாக செயல்படுவதோடு, எங்களுக்கான நிலத்தை நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகக் கூறுகிறாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நில அளவையரின் ஆதரவோடு, பக்கத்து இடத்திற்கு சொந்தக்காரா் எங்கள் இடத்தை காலி செய்யுமாறு மிரட்டி வருகிறாா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா். அதனைத் தொடா்ந்து போலீஸாா் அழைத்துச் சென்று ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com