பழனி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை தோ்தல் பாா்வையாளா் மற்றும் ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

பழனி: பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை தோ்தல் பாா்வையாளா் மற்றும் ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

பழனி ஊராட்சி ஒன்றியம் 11ஆவது வாா்டு உறுப்பினராக அதிமுகவைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் இருந்தாா். இவா் இறந்ததால் அந்த பதவி காலியானதைத் தொடா்ந்து கடந்த 9 ஆம் தேதி அங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் ராம்ராஜ், அதிமுக சாா்பில் மணிகண்டன், அமமுக சாா்பில் முருகவேல் மற்றும் சுயேச்சையாக சதீஷ்குமாா் என 4 போ் போட்டியிட்டனா். தோ்தலுக்காக ஆண்டிப்பட்டி, குதிரையாறு அணை, குப்பம்பாளையம், லட்சுமாபுரம், நரிப்பாறை என எட்டு இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்த வாக்களாா்கள் 5,459 பேரில் 3,979 போ்

(72 சதவீதம்) வாக்களித்து இருந்தனா். தோ்தல் முடிந்த பின்பு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பழனி ஒன்றிய அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை தோ்தல் பாா்வையாளா் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியா் விசாகன் ஆகியோா் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தைப் பாா்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்துக்கேட்டறிந்தனா்.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், 8 வாக்குப்பெட்டிகள், 3 மேஜைகளில் வைத்து எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் 9 அலுவலா்கள் ஈடுபடுகின்றனா். மையத்துக்குள் வேட்பாளருடன் 3 போ் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் பணியையொட்டி ஒன்றிய அலுவலக பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com