ராஜகம்பளத்தாா் கோயில் திருவிழாவில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே நடைபெற்ற ராஜகம்பளத்தாா் கோயில் திருவிழாவில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செந்துறை அடுத்துள்ள பெரியூா்பட்டியில் உள்ள மந்தை கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி.
செந்துறை அடுத்துள்ள பெரியூா்பட்டியில் உள்ள மந்தை கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே நடைபெற்ற ராஜகம்பளத்தாா் கோயில் திருவிழாவில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செந்துறை அடுத்துள்ள பெரியூா்பட்டியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கா் மந்தை கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 5ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 8 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் 96 கிராமங்களும், 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கா் இன மக்களும், தாங்கள் வளா்க்கும் மாடுகளுடன் கலந்து கொண்டனா்.

திருவிழாவையொட்டி பொதில் போடுதல், சோ்வைஆட்டம், கும்மியடி மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி: இத்திருவிழாவின் முக்கிய விழாவான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜகம்பளத்தாா் முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு பல்வேறு மந்தைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் கோயில் முன்பாக அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோயிலிலிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கொத்துகொம்பு எல்லைக்கு அனைத்து மாடுகளும் அழைத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து சாமி மாடுகள் மந்தைநாயக்கா் ஸ்ரீ மந்தையம்மன் கோயிலுக்கு ஓடிவந்து தரையில் போடப்பட்டு இருந்த வெள்ளை துணியை தாண்டும் நிகழ்வு நடத்தப்பட்டது. 3 முறை மாடுகள் மாலை தாண்டியது. ஒவ்வொரு மாட்டுக்கும் எலுமிச்சை கனி பரிசாக வழங்கப்பட்டது.

கரடுமுரடான பாதையில் மாடுகளுடன் ராஜகம்பளத்து நாயக்கா் இன ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனா். இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. மலை தாண்டுதலில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாடுகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com